071
கானம் பாடியே வாழ்த்தின
கானம் பாடியே வாழ்த்தின வான சேனைகளே தேவ மைந்தனும் தோன்றினார் மாந்தர் சாயலிலே (1) (கானம் பாடியே...) கர்த்தர் இயேசுவைக் கண்டிட பெத்தலை செல்வோம் இத்தரை தன்னை மீட்டிட சத்திரம் வந்தார் கர்த்தர் நாயகர் (1) (கானம் பாடியே...) மந்தை மேய்ப்பர்கள் கண்டனர் மைந்தன் இயேசுவையே சிந்தை மகிழ்ந்து சென்றனர் தந்த தேவனையே (1) (கர்த்தர் இயேசு...) வருகைக்காக காத்திருப்போம் வருவார் சீக்கிரமே விந்தையாக நாமங்கே வானில் சென்றிடுவோம் (1) (கர்த்தர் இயேசு...)