072
சின்ன இயேசு பாலகனே
சின்ன இயேசு பாலகனே என்னைத் தேடி வந்தீரோ (2) துன்பம் சூழும் உலகிலே இன்பம் அளிக்கப் பிறந்தீரோ (சின்ன இயேசு...) வான வாழ்வை வெறுத்தீரோ மேன்மை யாவும் மறந்தீரோ (2) ஏழ்மைக் கோலம் எடுத்தீரோ தாழ்மை ரூபம் தரித்தீரோ (2) (சின்ன இயேசு...) தீர்க்கன் உரைத்த வாக்குப்படி மண்ணை நோக்கி வந்தீரோ (2) பாலன் உம்மைப் பணிந்திட ஆயர் தூதர் சென்றனர் (2) (சின்ன இயேசு...)