096
இயேசு நேசிக்கிறார் இயேசு
இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்தது
என்ன மாதவமோ (2)
நீசனாம் எனைத் தான் இயேசு நேசிக்கிறார் (1)
மாசில்லாத பரன் சுதன் தன் முழு
மனதால் நேசிக்கிறார் (2)
இயேசு நேசிக்கிறார்...
நாதனை மறந்தும் நாட்களைத் துலைத்தும் (1)
நீதன் இயேசென்னை நேசிக்கிறாரெனில்
நித்தம் ஆச்சரியம் (2)
இயேசு நேசிக்கிறார்...
ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார் (1)
அதை நினைத்தவர்
அன்பின் கரத்துள்ளே
ஆவலாய்ப் பறப்பேன் (1)
இயேசு நேசிக்கிறார்...