Home
1

ஸ்தோத்திரம் இயேசு நாதா

          ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில் (2)

வானதூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஒய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும்
மன்னவனே உமக்கு (2)

இத்தனை மகத்துவமுள்ள பதவி
இவ் வேளைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம் (2)

நின் உதிரமதினால் திறந்த நின்
ஜீவ புது வழியாம்
நின்னடியார்க்கு பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம் (2)

இன்றைத் தினம் இதிலும் ஒருமித்துக்
கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே (2)

நீரல்லால் எங்களுக்கு பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
நீரேயன்றி இகத்தில் வேறே ஒரு
தேட்டமில்லைப் பரனே (2)

(ஸ்தோத்திரம் இயேசு நாதா...)
        

Listen to the Song

Song 1
0:00 / 0:00
Speed:

Share this Song