10
எல்லாம் இயேசுவே
எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே தொல்லை மிகும் இவ்வுலகில் துணை இயேசுவே (2) ஆயனும் சகாயனும் நேயனு முபாயனும் (1) நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும் தந்தை தாயினம் சனம் பந்துள்ளோர் சினேகிதர் சந்தோட சகலயோக சம்பூரண பாக்கியமும் (எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்...) கவலையிலாறுதலும் கங்குலிலென் ஜோதியும் (1) கஸ்ட நோய்ப் படுக்கையிலே கை கண்ட ஒளசதமும் போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ஆதரவு செய்திடுங் கூட்டாளியும் மென் தோழனும் (எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்...) அணியுமாபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும் (1) பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்யஸ்தனும் ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ஞான கீதமும் களிப்பும் நாட்டமும் கொண்டாட்டமும் (எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்...)