100
கர்த்தர் தேவன் என்னிலே
கர்த்தர் தேவன் என்னிலே வாசம் செய்யும் நாளிது அக்கினியின் மதிலாக அரவணைத்து நிற்கின்றார் (4) (கர்த்தர் தேவன் என்னிலே...) கிறிஸ்து இயேசு மகிமையின் இரகசியமாய் என்னிலே வாசம் செய்து வருவதே இரகசியம் இரகசியம் (4) (கர்த்தர் தேவன்...) வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் என்னிலே கிரியை செய்யும் வல்லமை ஆகா என்ன அதிசயம் (4) (கர்த்தர் தேவன்...) எந்தன் தேவன் கண்ணானால் கண்ணின் மணியாய் நானிருப்பேன் என்னைத் தொடுவோன் அவரது கண்ணின் மணியைத் தொடுவானாம் (4) (கர்த்தர் தேவன்...) பராக்கிரமர் அவரே தான் பட்டயம் அவர் கையில் நானாவேன் என்னை வில்லாய் நாணேற்றி எதிரியினை வெல்லுவார் (4) (கர்த்தர் தேவன்...)