Home
101

கலங்காதே கலங்காதே

          கலங்காதே கலங்காதே (1)
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் (1)
கலங்காதே கலங்காதே…

முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக (2)
பாவங்களை அறிக்கையிடு (1)
பரிசுத்தமாகிவிடு - நீ (1)

(கலங்காதே கலங்காதே...)

கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார் (2)
கரம் விரித்து அழைக்கின்றார் (1)
கண்ணீரோடு ஓடிவா நீ (1)

(கலங்காதே கலங்காதே...)

காலமெல்லாம் உடனிருந்து
கரம் பிடித்து நடத்திச் செல்வார் (2)
கண்ணீரெல்லாம் துடைப்பார் (1)
கண்மணிபோல்க் காத்திடுவார் - உன்னைக் (1)

(கலங்காதே கலங்காதே...)

உலகத்தின் வெளிச்சம்
நீ எழுந்து ஒளி வீசு (2)
மலைமேல் உள்ள பட்டணம் (1)
மறைவாக இருக்காதே நீ (1)

(கலங்காதே கலங்காதே...)

உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம் (2)
உன்னை அழைத்தவரோ (1)
உள்ளங்கையில் ஏந்திடுவார் - உன்னை (1)

(கலங்காதே கலங்காதே...)
        

Listen to the Song

Song 101
0:00 / 0:00
Speed:

Share this Song