102
உம்மைப் பிரிந்து வாழ
உம்மைப் பிரிந்து வாழ முடியாதைய்யா இயேசைய்யா இயேசைய்யா (1) (உம்மைப் பிரிந்து...) திராட்சைச் செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் (2) மிகுந்த கனி கொடுப்பேன் (1) உம் சீடனாயிருப்பேன் நான் (1) - நான் ( உம்மைப் பிரிந்து...) முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் (2) உமக்கு மறைவாய் எங்கே போவேன் (1) உம்மை விட்டு எங்கே ஓடுவேன் - நான் (1) (உம்மைப் பிரிந்து...) பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போகமாட்டேன் (2) துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் (1) சோர்ந்து போகமாட்டேன் - நான் (1) (உம்மைப் பிரிந்து...) நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்து உள்ளீர் (2) என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் (1) எல்லாம் உம் கிருபை ஐயா (1) (உம்மைப் பிரிந்து...)