Home
104

தெய்வமே இயேசுவே உம்மை

          தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (1)

உலகப் பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனைய்யா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனைய்யா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் (2)

(தெய்வமே இயேசுவே...)

எதை நான் பேச வேண்டுமென்று
கற்றுத் தாருமைய்யா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமைய்யா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே (2)

(தெய்வமே இயேசுவே...)

உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திடுவேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரைத் துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன் (2)

(தெய்வமே இயேசுவே...)
        

Listen to the Song

Song 104
0:00 / 0:00
Speed:

Share this Song