107
இஸ்ரவேலே பயப்படாதே
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் (2) (இஸ்ரவேலே பயப்படாதே...) வழியும் சத்தியமும் ஜீவனும் நானே (1) (இஸ்ரவேலே பயப்படாதே...) உன்னை நானே தெரிந்துகொண்டேனே (1) உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே (1) ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் (வழியும் சத்தியமும்...) தாய் மறந்தாலும் நான் மறவேனே (1) உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் (1) ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை (வழியும் சத்தியமும்...) தீயின் நடுவே நீ நடந்தாலும் (1) எரிந்து நீயும் போகமாட்டாய் (1) ஆறுகளை நீ கடக்கும் போதும் மூழ்கி போகமாட்டாய் (வழியும் சத்தியமும்...) துன்ப நேரம் சோர்ந்துவிடாதே (1) ஜீவ கீரிடம் உனக்குத் தருவேன் (1) சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஓளி வீசு (வழியும் சத்தியமும்...)