109
உம்மோடு இருக்கணுமே
உம்மைப்போல் மாறணுமே (2) உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே (1) (உம்மோடு இருக்கணுமே...) ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறணுமே (2) எல்லா நாளும் இலைகளோடு கனிகள் கொடுக்கணுமே (2) (உம்மோடு இருக்கணுமே...) உலகப் பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறணுமே (2) உம்மையே என் கண் முன் வைத்து ஓடி ஜெயிக்கணுமே (2) (உம்மோடு இருக்கணுமே...) வார்த்தை என்னும் வாளையேந்தி யுத்தம் செய்யணுமே (2) கடினமான பாறை இதயம் உடைத்து நொறுக்கணுமே (2) (உம்மோடு இருக்கணுமே...) ஆத்ம பார உருக்கத்தோடு அழுது புலம்பணுமே (2) இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் மேய்ப்பன் ஆகணுமே (2) (உம்மோடு இருக்கணுமே...)