Home
114

உதவி வரும் கன்மலை

          உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்க்கின்றேன்

(உதவி வரும் கன்மலை...)

கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்கமாட்டார் (2)
இஸ்ரவேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்கமாட்டார் (2)

(உதவி வரும் கன்மலை...)

கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார் (2)
பகலினிலும் இரவினிலும்
பாதுகாக்கின்றார் (2)

(உதவி வரும் கன்மலை...)

கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் (2)
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் (2)

(உதவி வரும் கன்மலை...)

போகும் போதும் காக்கின்றார்
திரும்பும்போதும் காக்கின்றார் (2)
இப்போதும் எப்போதும்
எந்நாளும் காக்கின்றார் (2)

(உதவி வரும் கன்மலை...)
        

Listen to the Song

Song 114
0:00 / 0:00
Speed:

Share this Song