116
எத்தனை நன்மைகள் எனக்கு
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் நான் எப்படி நன்றி சொல்வேன் (2) நன்றி ராஜா...நன்றி ராஜா… நன்றி ராஜா...நன்றி ராஜா...(2) தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மைத் துதிப்பேன் (2) தேவனே உம்மைத் துதிப்பேன் (எத்தனை நன்மைகள்...) பெலவீனன் என்று தள்ளிவிடாமல் பெலத்தால் இடைகட்டினீர் (2) பெலத்தால் இடைகட்டினீர் (எத்தனை நன்மைகள்...) பாவத்தினாலே மரித்துப்போயிருந்தேன் கிருபையால் இரட்சித்தீரே (2) கிருபையால் இரட்சித்தீரே (எத்தனை நன்மைகள்...) எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் எனக்காய் மீண்டும் வருவீர் (2) எனக்காய் மீண்டும் வருவீர் (எத்தனை நன்மைகள்...) கரங்களைப் பிடித்து கண்மணிபோல காலமெல்லாம் காத்தீர் (2) காலமெல்லாம் காத்தீர் (எத்தனை நன்மைகள்...) பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி பூரண சுகமாக்கினீர் (2) பூரண சுகமாக்கினீர் (எத்தனை நன்மைகள்...) முள்முடி தாங்கி திரு ரத்தம் சிந்தி சாத்தானை ஜெயித்துவிட்டீர் (2) சாத்தானை ஜெயித்துவிட்டீர் (எத்தனை நன்மைகள்...)