Home
117

உம்மை நம்பி உந்தன்

          உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக்கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர்

(உம்மை நம்பி...)

கண்ணீரைத் துடைத்து கரங்களைப் பிடித்து
காலமெல்லாம் காத்துக்கொண்டீர் (2)
என்னைக் காலமெல்லாம் காத்துக்கொண்டீர்

(உம்மை நம்பி...)

மகனாக மகளாக அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர் (2)
ஐயா உரிமையை எனக்குத் தந்தீர்

(உம்மை நம்பி...)

அச்சாரமாய் முத்திரையாய் அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே (2)
ஐயா அடிமைக்குத் தந்தீரே

(உம்மை நம்பி...)

குருடர்கள் பார்த்தார்கள் செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள் (2)
ஐயா முடவர்கள் நடந்தார்கள்

(உம்மை நம்பி...)
        

Listen to the Song

Song 117
0:00 / 0:00
Speed:

Share this Song