Home
12

விந்தைக் கிறிஸ்து இயேசு

          விந்தைக் கிறிஸ்து இயேசு ராஜா
உந்தன் சிலுவை என் மேன்மை (1)

(விந்தைக் கிறிஸ்து...)

சுந்தரம் மிகும் இந்தப் பூவில் (1)
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்

(விந்தைக் கிறிஸ்து...)

திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருப்பினும் (2)
குருசை நோக்கி பார்க்க எனக்கு (1)
உரிய பெருமை யாவும் அற்பமே

(விந்தைக் கிறிஸ்து...)

உம்குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவநதியாம் (2)
துங்க இரத்த ஊற்றில் மூழ்கி (1)
தூய்மை அடைந்து மேன்மையாகினேன்

(விந்தைக் கிறிஸ்து...)

சென்னி விலா கை கால் நின்று
சிந்துததோ துயரோடன்பு (2)
மன்னா இதைப் போன்ற காட்சி (1)
எந்தநாளிலுமே எங்கும் காணேன்

(விந்தைக் கிறிஸ்து...)

இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன் (2)
எந்த அரும் பொருள் ஈடாகும் (1)
என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன்

(விந்தைக் கிறிஸ்து...)
        

Listen to the Song

Song 12
0:00 / 0:00
Speed:

Share this Song