Home
121

மனதுருகும் தெய்வமே

          மனதுருகும் தெய்வமே இயேசைய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

(மனதுருகும் தெய்வமே...)

நீர் - நல்லவர் சர்வ வல்லவர் (1)
உம் இரக்கத்துக்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை (2)
அவை - காலைதோறும் புதிதாயிருக்கும் (1)

(மனதுருகும் தெய்வமே...)

மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களைச் சுமந்து கொண்டீர் (2)
ஐயா துக்கங்களைச் சுமந்து கொண்டீர்

(மனதுருகும் தெய்வமே...)

எங்களுக்குச் சமாதானம் உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததைய்யா (2)
ஐயா உம்மேலே விழுந்ததைய்யா

(மனதுருகும் தெய்வமே...)

சாபமான முள்முடியை தலைமேலே சுமந்துகொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் (2)
ஐயா சிலுவையிலே வெற்றி சிறந்தீர்

(மனதுருகும் தெய்வமே...)

எங்களது மீறுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தளும்புகளால் சுகமானோம் (2)
உந்தன் தளும்புகளால் சுகமானோம்

(மனதுருகும் தெய்வமே...)

தேடி வந்த மனிதர்களின் தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் (2)
ஐயா தினம் தினம் அற்புதம் செய்தீர்

(மனதுருகும் தெய்வமே...)
        

Listen to the Song

Song 121
0:00 / 0:00
Speed:

Share this Song