123
இரக்கம் உள்ளவரே
இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே (2)
நீடிய சாந்தம் பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே (2)
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் (1)
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே (2)
துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் (2)
மகிழ்வுடன் ஸ்தோத்திர பலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம் (2)
(என் இயேசு ராஜா...)
கூப்பிடும் யாவருக்கும்
அருகில் இருப்பவரே (2)
உண்மையாய்க் கூப்பிடும் குரல்தனைக்கேட்டு
விடுதலை தருபவரே (2)
(என் இயேசு ராஜா...)
உலகத் தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர் (2)
துரோகியாய் வாழ்ந்த என்னையே மீட்டு
புது வாழ்வு தந்தவரே (2)
(என் இயேசு ராஜா...)