127
சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
(சுமந்து காக்கும்...)
தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலை நரைக்கும் வரை தாங்கிடுவார் (2)
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம் (1)
(சுமந்து காக்கும்...)
ஆயன் ஆட்டை சுமப்பதுபோல்
ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார் (2)
பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு
பயப்படாதே சிறுமந்தையே (1)
(சுமந்து காக்கும்...)
கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார் (2)
கழுகுபோல் சிறகின் மேல் வைத்து
காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார் (1)
(சுமந்து காக்கும்...)