128
உந்தன் நாமம் மகிமை
உந்தன் நாமம் மகிமைப் பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே (2)
ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்
ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்
இலங்கைத் தேசம் இரட்சகரை அறிய வேண்டுமே (1)
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே (1)
(உந்தன் நாமம்...)
சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே (1)
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே (1)
(உந்தன் நாமம்...)
கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் (1)
கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் (1)
(உந்தன் நாமம்...)