130
ஆறுதலின் தெய்வமே
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது (2) ஆறுதலின் தெய்வமே... உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் (2) தூய மனத்துடன் துதிப்பார்கள் (1) துதித்துக்கொண்டிருப்பார்கள் - ஆமென் (1) (ஆறுதலின் தெய்வமே...) உம்மிலே பெலன்கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் (2) ஓடினாலும் களைப்படையார் (1) நடந்தாலும் சோர்வடையார் - ஆமென் (1) (ஆறுதலின் தெய்வமே...) கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் (2) வல்லமை மேலே வல்லமை கொண்டு (1) சீயோனைக் காண்பார்கள் - ஆமென் (1) (ஆறுதலின் தெய்வமே...) வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒருநாள் மேலானது (2) ஒவ்வொருநாளும் உமது இல்லத்தின் (1) வாசலில் காத்திருப்பேன் ஆமென் (1) (ஆறுதலின் தெய்வமே...)