133
மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ (2)
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ (2)
ஆராதனை ஆராதனை (1)
என் அன்பர் இயேசுவுக்கே (1)
மகிமை உமக்கன்றோ…
விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர் (2)
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்துகொண்டீர் (2)
(ஆராதனை...)
வழி காட்டும் தெய்வம் துணையாளரே
தேற்றும் தெய்வமே (2)
அன்பால் பெலத்தால்
அனல் மூட்டும் ஐயா அபிஷேக நாதரே (2)
(ஆராதனை...)
எப்போதும் இருக்கின்ற இனிமேலும்
வருகின்ற எங்கள் ராஜாவே (2)
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக (2)
(ஆராதனை...)