Home
135

உந்தன் நாவில் எந்தன்

          உந்தன் நாவில் எந்தன் உள்ளம்
தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம்
பாட வேண்டும்

(உந்தன் நாவில்...)

உள்ளம் எல்லாம் அன்பினாலே
பொங்க வேண்டும் (2)
கள்ளம் நீங்கி காலம் எல்லாம்
வாழ வேண்டும் (2)

(உந்தன் நாவில்...)

பாவமான சுபாவம் எல்லாம்
நீங்க வேண்டும் (2)
தேவ ஆவி தேற்றி என்றும்
நடத்த வேண்டும் (2)

(உந்தன் நாவில்...)

ஜீவத் தண்ணீர் நதியாகப்
பாய வேண்டும் (2)
சிலுவை நிழலில் தேசம் எல்லாம்
வாழ வேண்டும் (2)

(உந்தன் நாவில்...)

வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும் (2)
வாழ்நாள் எல்லாம் பணி செய்து
மடிய வேண்டும் (2)

(உந்தன் நாவில்...)
        

Listen to the Song

Song 135
0:00 / 0:00
Speed:

Share this Song