136
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு (கிறிஸ்துவுக்குள்...) என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் (2) யார் என்ன சொன்னாலும் (1) நான் சோர்ந்து போகமாட்டேன் (1) (கிறிஸ்துவுக்குள்...) என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார் (2) குருத்தோலை கையில் எடுத்து (1) நான் ஓசன்னா பாடிடுவேன் (1) (கிறிஸ்துவுக்குள்...) சாத்தானின் ஆதிகாரமெல்லாம் என் நேசர் பரித்துக்கொண்டார் (2) சிலுவையில் அறைந்துவிட்டார் (1) காலாலே மிதித்துவிட்டார் இயேசு (1) (கிறிஸ்துவுக்குள்...)