139
விடுதலை நாயகன் வெற்றியை
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் (2)
நான் பாடிப் பாடி மகிழ்வேன்
தினம் ஆடி ஆடித் துதிப்பேன் (2)
எங்கும் ஓடி ஒடிச் சொல்லுவேன் (1)
என் இயேசு ஜீவிக்கிறார் (1)
(விடுதலை நாயகன்...)
அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக்கொண்டார் (2)
என் பாவம் அனைத்தும் மன்னித்தார் (1)
புது மனிதனாக மாற்றினார் (1)
(விடுதலை நாயகன்...)
அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார் (2)
சாத்தானின் வலிமை வெல்ல (1)
அதிகாரம் எனக்குத் தந்தார் (1)
(விடுதலை நாயகன்...)
செங்கடலைக் கடந்து செல்வேன்
ஜோர்தானை மிதித்து நடப்பேன் (2)
எரிகோவைச் சுற்றி நடப்பேன் (1)
எக்காளம் ஊதி ஜெயிப்பேன் (1)
(விடுதலை நாயகன்...)