Home
140

உம்மைப் போல யாரோ

          உம்மைப் போல யாரோ - உலகிலே
என்னை நேசித்தாரோ - இயேசையா
உம்மைப் போல யாரோ…
அன்னையைப் போலே
அமுதூட்டி வளர்த்தாயே (2)

(உம்மைப் போல யாரோ...)



தொங்கு சிலுவைக் காட்சி - கண்டேன்
நெஞ்சம் துடிக்குதய்யோ
தொங்கு சிலுவைக் காட்சி…
பஞ்சமா பாவி என்
தஞ்சமும் ஐந்து காயமல்லோ (2)

(உம்மைப் போல யாரோ...)

பாவ ஆழியிலே - அமிழ்ந்து
மூழ்கும் வேளையிலே
பாவ ஆழியிலே...
பாவி என்னை மீட்ட என்அன்பே வாழ்வில் மறப்பேனோ? (2)

(உம்மைப் போல யாரோ...)
        

Listen to the Song

Song 140
0:00 / 0:00
Speed:

Share this Song