Home
141

பல்லாண்டு எம்மைப்

          பல்லாண்டு எம்மைப் பாதுகாத்த
பண்புள்ள எம் தயாபராவே
பற்றோடு உம் பாதத்தண்டையில்
பணிந்து உம்மைத் துதி செய்கின்றோம் (2)

இயேசுவே எங்கள் தேவனே
வல்லமையின் மகிமையின் ராஜனே
நன்றியோடும்மைத் துதிக்கின்றோம் (1)

சோதனை வேதனை நேரத்தில்
என் கண்ணீர் துடைத்தீரே
அன்பின் கரத்தினாலே
அரவணைத் தெம்மைக் காத்தீரே (2)

(இயேசுவே எங்கள்...)

இப்புதிய (மாதமதில்) ஆண்டதனில்
பக்கத் துணையாய் எம்மருகில்
சுக சந்தோச சமாதானத்தை
ஈந்தெமக்கு ஆசீர்வதியும் (2)

(இயேசுவே எங்கள்...)
        

Listen to the Song

Song 141
0:00 / 0:00
Speed:

Share this Song