142
பாவிக்குப் புகலிடம் இயேசு
பாவிக்குப் புகலிடம் இயேசு ரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே (2)
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
(பாவிக்குப் புகலிடம்...)
காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளி
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை (2)
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை (1)
(பாவிக்குப் புகலிடம்...)
கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கீரிடம் முட்களில் பின்னி சூடிட (2)
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் காணும் உள்ளம் தாங்குமோ? (1)
(பாவிக்குப் புகலிடம்...)