143
சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே
கண்டுன்னை அழைத்த தேவன்
கைவிடுவாரோ (2)
(சோர்ந்து போகாதே...)
துன்பங்கள் தொல்லைகள் - உன்னைச்
சூழ்ந்து கொண்டாலும் (2)
அன்பர் உன்னைத் தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ (2)
(சோர்ந்து போகாதே...)
சோதனைகளைச் சகிப்போன்
பாக்கியவானல்லோ (2)
ஜீவ கீரிடம் சூடும் நேரம்
என்ன பேரின்பம் (2)
(சோர்ந்து போகாதே...)
வாக்களித்த தேவனை - நீ
பாடிக் கொண்டாடு (2)
ஊக்கமான ஆவி உன்னைத்
தாங்க மன்றாடு (2)
(சோர்ந்து போகாதே...)
;