Home
144

இயேசு என்றதுமே எனக்கோர்

          இயேசு என்றதுமே - எனக்கோர்
இன்பம் பிறக்குதம்மா
காசினில் அவர் போல் - எவரையும்
கண்டதும் இல்லையம்மா

(இயேசு என்றதுமே...)

பேசத் தொடங்கினாலோ - பேச்செல்லாம்
பேரின்பம் சொட்டுதம்மா (2)
பார்க்கத் தொடங்கினாலோ
பாவி நம் மேலேயம்மா (2) - பார்வையெல்லாம்

(இயேசு என்றதுமே...)

குஸ்ட ரோகி அவனைக் - கையினால்
கூசாமல்த் தொட்டாரம்மா (2)
கஷ்டப்படுவோரைக் - கண்டதும்
கண்ணீர் வடித்தாரம்மா (2)

(இயேசு என்றதுமே...)

சிலுவை மரத்தினில் - இரத்தத்தைச்
சிந்தி மரித்தாரம்மா (2)
உலகை மீட்டிடவே - ஆண்டவர்
அன்போடு வந்தாரம்மா (2)

(இயேசு என்றதுமே...)

கல்லறை விட்டெழுந்தே - உலகில்
காட்சியளித்தாரம்மா (2)
வல்ல சுத்தாவியினைத் - தரவே
வானில் எழுந்தாரம்மா (2)

(இயேசு என்றதுமே...)
        

Listen to the Song

Song 144
0:00 / 0:00
Speed:

Share this Song