Home
145

வழி நடத்தும் வல்ல

          வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே
வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் தாயகனே - நம்

(வழி நடத்தும்...)

போகும் வழியைக் காட்டி நல்ல
போதனை செய்வார் (2)
ஏகும் சுத்தர் மீதி கண்கள்
திருத்தி நடத்துவார் - இயேசு
திருத்தி நடத்துவார்

(வழி நடத்தும்...)

வாதை நோய்கள் வன்துன்பங்கள்
வருத்திய போதும் (2)
பாதையில் நாம் சோர்ந்திடாமல்
பலப்படுத்திடுவார் - இயேசு
திடப்படுத்திடுவார்

(வழி நடத்தும்...)

காடானாலும் மேடானாலும்
கடந்து சென்றிடுவோம் (2)
பாடானாலும் பாடிச் செல்வோம்
பரவசமுடனே - இயேசு
பரன்தான் நம்முடனே

(வழி நடத்தும்...)
        

Listen to the Song

Song 145
0:00 / 0:00
Speed:

Share this Song