Home
146

கொல்கொதா மேட்டினில்

          கொல்கொதா மேட்டினில் குருதி வெள்ளம்
கொடிய என் பாவத்தைக் கழுவிடுதே
பொல்லாத பாவி என் கோர உள்ளம்
இயேசுவின் வாதையால் நொருங்கிடுதே

(கொல்கொதா மேட்டினில்...)

ஓங்கியே தோன்றிடும் சிலுவையிலே
ஏங்கியே தொங்கிடும் இயேசு பரன்
தாகத்தால் தவித்தே கூவுகின்றார்
பாவத்தைத் துடைப்பேன் வா என்கிறார்

(கொல்கொதா மேட்டினில்...)

பாவங்கள் இரத்தம் போல் சிவப்பாயினும்
பஞ்சைப்போல் வெண்மையாகிடுமே
பாய்ந்திடும் குருதி வெள்ளத்திலே
பரிசுத்தம் அடைவாய் என்கிறாரே

(கொல்கொதா மேட்டினில்...)

கைகளும் கால்களும் ஆணிகளால்
காயங்களானதென் பாவத்தினால்
கறைப்பட்ட எந்தன் பாவத்தினால்
களிப்படைவேன் அவர் கழுவினதால்

(கொல்கொதா மேட்டினில்...)
        

Listen to the Song

Song 146
0:00 / 0:00
Speed:

Share this Song