Home
148

குதூகலம் கொண்டாட்டமே

          குதூகலம் கொண்டாட்டமே - என்
இயேசுவின் சந்நிதானத்தில் (2)
ஆனந்தம் ஆனந்தமே - என்
அன்பரின் திருப்பாதத்தில் (2)

(குதூகலம் கொண்டாட்...)

பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால் (2)
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால் (2)

(குதூகலம் கொண்டாட்...)

தேவாதி தேவன் தினந்தோறும் தங்கும்
தேவாலயம் நானே (2)
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே (2)

(குதூகலம் கொண்டாட்...)

வல்லவராம் இயேசு வாழவைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார் (2)
ஒருமனமாய்க் கூடி ஓசன்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம் (2)

(குதூகலம் கொண்டாட்...)

எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
இயேசு வருகின்றார் (2)
ஒரு நொடிப் பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம் (2)

(குதூகலம் கொண்டாட்...)
        

Listen to the Song

Song 148
0:00 / 0:00
Speed:

Share this Song