Home
149

நேசரே உம் திருப்பாதம்

          நேசரே உம் திருப்பாதம் அமர்ந்து
நிம்மதி நிம்மதியே (2)
ஆர்வமுடனே பாடித் துதித்தேன்
ஆனந்தம் ஆனந்தமே (2)
அடைக்கலமே...அதிசயமே…
ஆராதனை...ஆராதனை... (2)

உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதைய்யா (2)
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா (2)
வல்லவரே...நல்லவரே…
ஆராதனை...ஆராதனை...(2)

பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே (2)
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே (2)
பரிசுத்தரே...அழைத்தவரே...
ஆராதனை...ஆராதனை... (2)

எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேனைய்யா (2)
இரத்தமே சிந்தி சாட்சியாய்
வாழ்வேன் நிச்சயம் நிச்சயமே (2)
இரட்சகரே...இயேசு நாதா…
ஆராதனை...ஆராதனை.... (2)
        

Listen to the Song

Song 149
0:00 / 0:00
Speed:

Share this Song