Home
15

அவர் எந்தன் சங்கீதமானவர்

          அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

(அவர் எந்தன் சங்கீதமானவர்...)

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே (2)
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே (2)

( அவர் எந்தன் சங்கீதமானவர்...)

இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் (2)
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் (2)

(அவர் எந்தன் சங்கீதமானவர்...)

வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ் நாள் முழுவதும் வாழ்த்திடுவோம் (2)
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் (2)

(அவர் எந்தன் சங்கீதமானவர்...)
        

Listen to the Song

Song 15
0:00 / 0:00
Speed:

Share this Song