150
கல்வாரி மலையில் என்
கல்வாரி மலையில் என் இயேசுவே தியாக பலியாக மாண்டீரே (கல்வாரி மலையில்...) தாயன்பு கொண்டேன் தன்னிறைவு இல்லை மனை அன்பு கொண்டேன் துணையாக இல்லை உன் அன்பு காண விழுந்தோடி வந்தேன் - நீர் சிலுவையைச் சுமந்து போவதெங்கே (1) (கல்வாரி மலையில்...) பொன்முடி கொண்டேன் நீர் முள்முடி கண்டீர் கண்முடி சிலுவையில் பொன்னுடல் தந்தீர் உம் அன்பு காண விழுந்தோடி வந்தேன் - நீர் சிலுவையைச் சுமந்து போவதெங்கே (1) (கல்வாரி மலையில்...) உன் அன்பு என்னில் வந்தாலே போதும் என் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே அவ்வன்பைக் காண நான் விழுந்தோடி வந்தேன் - நீர் சிலுவையைச் சுமந்து போவதெங்கே (1) (கல்வாரி மலையில்...)