153
எந்தன் அடைக்கலமே இயேசு
எந்தன் அடைக்கலமே இயேசு நாதா
ஏழைக் கூக்குரல் கேட்டிடும் தேவா
உம்மை அண்டிவந்தேன் இயேசு நாதா
என்னைத் தேற்றிடுமே இயேசு தேவா
(எந்தன் அடைக்கலமே இயேசு...)
கண்ணீரை எந்தன் உணவாக்கினேன்
ஜீவ தண்ணீரால் எந்தன் பசி நீக்குமே (2)
பரிகாசம் நிந்தை அவமானங்கள்
பழி நீக்கி எந்தன் பிணி நீக்குமே (2)
(எந்தன் அடைக்கலமே இயேசு...)
வறுமையினால் ஏழை வாடுகின்றேன்
தேவ கிருபையினால் வழி காட்டிடுமே (2)
வாலாக்காமல் என்னைத் தலையாக்குமே
கீழாக்காமல் என்னை மேலாக்குமே (2)
(எந்தன் அடைக்கலமே இயேசு...)
நெரிந்த நாணலை ஐயா முறியாமலும்
மங்கி எரிகின்ற திரியை அணையாமலும் (2)
எதிராளியோடு வழக்காடுவீர்
எளியவன் என் நியாயத்தை எடுத்துரைப்பீர் (2)
(எந்தன் அடைக்கலமே இயேசு...)