156
என் ஜனமே மனந்திரும்பு
என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடிவா (2) இறுதிக்காலம் வந்தாச்சு இன்னமும் தாமதம் ஏன் (2) (என் ஜனமேமனந்...) உன்னை நினைத்து சிலுவையிலே தாகம் தாகம் என்றார் (2) உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க தம்மையே பலியாக்கினார் (2) (என் ஜனமே மனந்...) தூய ரத்தம் உனக்காக தீய உன் வாழ்வு மாற (2) காயங்கள் உனக்காக உன் நோய் எல்லாம் தீர (2) (என் ஜனமே மனந்...) உனக்காக பரலோகத்தில் உறைவிடம் கட்டுகின்றார் (2) உன்னைத் தேடி வருகின்றார் இன்று நீ ஆயத்தமா (2) (என் ஜனமேமனந்...)