157
இயேசு என்னும் நாமத்திலே
இயேசு என்னும் நாமத்திலே
அன்பு என்னும் ஐக்கியத்துள்
சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்
அவர் திருச்சபையின் அங்கங்களாய்ச் சேருங்கள்
(இயேசு என்னும்...)
ஐக்கியத்தின் பெருமைதனை
அவனிக்கெல்லாம் சொல்லி வைத்த
ஆண்டவரின் நாமத்தையே பாடுங்கள் (3)
அந்த அண்ணல் நாமம் மகிமை பெற பாடுங்கள்
(இயேசு என்னும்...)
சத்தியத்தைக் காட்டி நம்மைச்
சாந்தமுடன் காத்துக்கொள்ளும்
கர்த்தர் இயேசு ஒருவரென்றே கூறுங்கள் (3)
அந்தக் கன்மலையின் கருணைதனைத் தேடுங்கள்
(இயேசு என்னும்...)
அன்பு என்னும் குரல் கொடுத்து
அழைக்கும் இயேசு சாமியிடம்
அடைக்கலம் நான் இயேசு என்றே வாருங்கள் (3)
அவர் மாசில்லாத மகிமைதனைப் பாடுங்கள்
(இயேசு என்னும்...)