Home
16

தேவனே நான் ஊமதண்டையில்

          தேவனே நான் ஊமதண்டையில் - இன்னும் நெருங்கி
சேர்வதே என் ஆவல் பூமியில் (2)
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

(தேவனே நான் ஊமதண்டையில்...)

யாக்கோபைப் போல் போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லிலே சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா

(தேவனே நான் ஊமதண்டையில்...)

பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்ற
பண்ணுமையா எந்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் ஊமதண்டை
அருமையாய் என்னை அழைக்கும்
அன்பின் தூதராகச் செய்யும்

(தேவனே நான் ஊமதண்டையில்...)


நித்திரையில் என்றும் விழித்து - காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர் கல் நாட்டுவேனே
எந்தன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

(தேவனே நான் ஊமதண்டையில்...)

ஆனந்தமாய் செட்டை விரித்து - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப்போயினும்
வானமண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறும் காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்ட ிச் சேர்வேன்

(தேவனே நான் ஊமதண்டையில்...)
        

Listen to the Song

Song 16
0:00 / 0:00
Speed:

Share this Song