Home
160

விசுவாச வீடு கட்டுவோம்

          விசுவாச வீடு கட்டுவோம் - நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
இயேசுவின் பிள்ளைகள் ஆகியே - என்றும்
அசையாத அஸ்திபாரத்தில்

(விசுவாச வீடு...)

மணலோரம் கட்டுகின்ற வீடுகள் - வெள்ளம்
வரும்போது சாய்ந்துபோக நேருமே (2)
கன்மலைமீது கட்டுகின்ற வீடுகள் (1)
காற்றடித்தாலும் அசையாது நிற்குமே

(விசுவாச வீடு...)

புத்தியுள்ள மனிதர் கட்டும் வீடுகள்
கன்மலைமீது கட்டும் வீடு ஆகுமே (2)
மதியில்லா மனிதர் கட்டும் வீடுகள் (1)
மணலோரம் கட்டும் வீடு ஆகுமே

(விசுவாச வீடு...)

இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்
கன்மலைமீது கட்டும் வீடு ஆகுமே (2)
தேவஞானம் தேசமெங்கும் பெருகவே (1)
இயேசு சொன்ன வார்த்தைகளே போதுமே

(விசுவாச வீடு...)
        

Listen to the Song

Song 160
0:00 / 0:00
Speed:

Share this Song