Home
161

அன்புள்ளங்கள் இங்கே கூடுது

          அன்புள்ளங்கள் இங்கே கூடுது - அந்தக்
கன்மலையைத் தான் தேடுது 
ஆண்டவர் நாமத்தைப் பாடுது - அந்தக்
அண்டையிலே வந்து சேருது

(அன்புள்ளங்கள் இங்கே...)

வேதத்திலே மனம் சேருது - வேத 
நாயகனைத்தான் தேடுது (2)
பேரின்பப் போதனை தந்தவரை - தினம் 
நன்றியினால் துதி பாடுது (2)

(அன்புள்ளங்கள் இங்கே...)

தேவனின் பிள்ளைகள் ஆகிட - இவர் 
நெஞ்சங்கள் இங்கே ஏங்குது (2)
வாருங்கள் இயேசுவின் பாதத்தில் - ஜென்ம 
சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில் (2)

(அன்புள்ளங்கள் இங்கே...)

பாவங்கள் போக்கிடும் தேவனை - இங்கு
பார்த்திடக் கண்கள் ஏங்குது (2) 
வாருங்கள் இயேசுவின் பாதத்தில் - ஜென்ம 
சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில் (2)

(அன்புள்ளங்கள் இங்கே...)

நித்திய ஜீவனை நாமடைய - அந்தச்
சத்திய நாதனை நாடுவோம் (2) 
கேட்பதைத் தந்திடும் தேவனிடம் - எங்கள் 
கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம் (2)

(அன்புள்ளங்கள் இங்கே...)
        

Listen to the Song

Song 161
0:00 / 0:00
Speed:

Share this Song