162
விண்ணிலும் மண்ணிலும்
விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
என்னிலும் வாழ்கின்றார் (2)
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார் (2)
பதறும் என் உடலுக்குள் பரிசுத்த ஆவியாய்
பவனியும் வருகின்றார் (2)
கதறி எம் கன்னத்தில் கண்ணீரும் வரும் வேளை
கையினால் துடைக்கின்றார் (2)
இயேசு கையினால் துடைக்கின்றார்
அடைக்கலம் கொடுக்கின்ற ஆண்டவர் இயேசு உன்
அண்டையில் வருகின்றார் (2)
படைத்திட்ட போதும் உன் பாவத்தை நாளும் தன்
சிலுவையில் சுமக்கின்றார் (2)
இயேசு சிலுவையில் சுமக்கின்றார்
உன்னிலும் என்னிலும் வாழ்கின்ற நேசரை
எந்நாளும் வெறுக்காதே (2)
என்னிடம் வாவென்று இரு கையை நீட்டும்
என் தேவனை மறக்காதே (2)
என் இயேசுவை மறக்காதே