163
என்னிடம் வாவென்று இயேசு
என்னிடம் வாவென்று - இயேசு இரு கையை நீட்டுகிறார் அழைக்கின்ற தேவனையே - என்றும் ஆண்டவராய் வணங்கு (என்னிடம் வாவென்று...) வருத்தப்பட்டு தினமும் பாரத்தை நீயேன் சுமக்கின்றாய் (2) என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன் என்றான் (2) (என்னிடம் வாவென்று...) வார்த்தையில் மாமிசமாய் - இயேசு மானிடனாய் உதித்தார் (2) ஆவியில் அசைவாடி எங்கள் உணர்விலும் வாழுகின்றார் (2) (என்னிடம் வாவென்று...) வேதத்தின் வார்த்தையினால் - தேவன் ஜீவனைக் கொடுக்கின்றார் (2) அன்பால் எம்மை மீட்டு நல்ல வழியினைக் காட்டுகின்றார் (2) (என்னிடம் வாவென்று...) ஆண்டவர் இயேசுவிடம் - உன்னை அடைக்கலம் கொடுத்துவிட்டால் (2) உன்னையும் மீட்டுக் கொள்வார் நித்திய வாழ்வையும் தந்திடுவார் (2) (என்னிடம் வாவென்று...)