168
வார்த்தையே தேவனாக
வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால் - தேவ வார்த்தையே எங்களை வாழ வைக்குது வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது (2) தேவனின் வார்த்தையில் சுத்தம் உள்ளது (1) - அந்த வார்த்தையில் கர்த்தரின் சித்தம் உள்ளது மனமாறுதலைத் தந்துவிடும் அர்த்தம் உள்ளது (1) - தேவ வார்த்தை எங்கள் கால்களுக்கு வெளிச்சமானது வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது (2) இயேசுவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதால் (1) - எங்கள் வாழ்விலே நிம்மதி தேடி வந்தது மாசில்லா ஜீவனை மீட்டுக்கொண்டதால் (1) - அந்த ஜீவனுள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளுவோம் வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது (2)