Home
169

வழி நடத்த வாரும்

          வழி நடத்த வாரும் - இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் - மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

(வழி நடத்த வாரும்...)

பழியைச் சுமந்து நாங்கள்
பாவக் கடலில் மூழ்கினோமே (2)
எமது படகைச் செலுத்தி
அன்புக் கரையில் சேர்க்க வாரும் (2)

(வழி நடத்த வாரும்...)

ஐம்புல ஆசைகளால் தினமும்
அடிமையாகிப் போனோம் (2)
எங்களின் நாயகனே
சத்திய வழியைக் காட்டித் தாரும் (2)

(வழி நடத்த வாரும்...)

சுதந்திர புருஷர்களாய் உமக்குச்
சொந்த ஜனங்களாக வேண்டும் (2)
உமது சுகந்தரும் வார்த்தையினால்
நாங்களும் சுகத்தை அடையவேண்டும் (2)

(வழி நடத்த வாரும்...)
        

Listen to the Song

Song 169
0:00 / 0:00
Speed:

Share this Song