Home
17

எந்தன் அன்புள்ள ஆண்டவர்

          எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் (2)
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்

ஆ ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே (1)

பெற்ற தாயும் என் தந்தையும் ஆனவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே (2)
வானம் பூமியும் யாவுமே மாறினும் நீரோ
வாக்கு மாறாதவரே

(ஆ ஆனந்தம்...)

உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன் (2)
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே

(ஆ ஆனந்தம்...)

எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
இந்த நிலையில்லா வாழ்க்கையிலே (2)
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீர்
பரிசுத்த ஜீவியமே

(ஆ ஆனந்தம்...)

பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆசையும் வீணல்லவோ (2)
பரலோக செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நீரே

(ஆ ஆனந்தம்...)
        

Listen to the Song

Song 17
0:00 / 0:00
Speed:

Share this Song