171
இயேசு கிறிஸ்துவின் அன்பு
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை என்றும் குறையாதது இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை என்றும் குறையாதது இயேசு கிறிஸ்துவின் அன்பு… பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார் ஆவலாய் உன்னை அழைக்கிறாரே (2) தயங்கிடாதே தாவி ஓடிவா தந்தை இயேசுவை சொந்தம் கொள்ள வா (2) தந்தை இயேசுவை சொந்தம் கொள்ள வா (இயேசு கிறிஸ்துவின் அன்பு...) உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார் உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் (2) உனக்காகவே அடிகள்பட்டார் உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2) உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (இயேசு கிறிஸ்துவின் அன்பு...) தாயும் தந்தையும் உன்னைத் தள்ளிவிட்டாலும் சொந்த பந்தங்கள் உன்னைக் கைவிட்டாலும் (2) கலங்கிடாதே கண்ணின் இமைபோல் காத்துக்கொள்ளுவார் சேர்த்துக்கொள்ளுவார் (2) காத்துக்கொள்ளுவார் சேர்த்துக்கொள்ளுவார் (இயேசு கிறிஸ்துவின் அன்பு...)