175
உறக்கம் தெளிவோம்
உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனிதான்
மழை மாரி பொழியும்
நாள் வரை உழைத்திடுவோம்
(உறக்கம் தெளிவோம்...)
அசுத்தம் களைவோம்
அன்பை அழைப்போம்
ஆவியில் அனுலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க
நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்
(உறக்கம் தெளிவோம்...)
அச்சம் தவிர்ப்போம்
தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்த சாட்சிகள்
நம்மிடை தோன்றி
நாதனுக்காய் மடிவோம்
(உறக்கம் தெளிவோம்...)
கிறிஸ்துவுக்காய்
இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய்
கஸ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதில்லை
(உறக்கம் தெளிவோம்...)
உயிர் பெறுவீர்
ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா
ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார்
(உறக்கம் தெளிவோம்...)