178
கலங்காதே மனமே
கலங்காதே மனமே திகையாதே மனமே (2) கன்மலையாம் கிறிஸ்து காத்திடுவார் தினமே (2) (கலங்காதே மனமே...) கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே (2) கடைசி வரை நம்மைக் கைவிடமாட்டார் (2) (கலங்காதே மனமே...) அனாதி தேவனே உனக்கு அடைக்கலம் (2) அவரது புயங்கள் உந்தன் ஆதாரம் (2) (கலங்காதே மனமே...) அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே (2) ஆதரிப்பாரே அமைதிகொள் மனமே (2) (கலங்காதே மனமே...)