18
எந்தன் நாவில் புதுப் பாட்டு
எந்தன் நாவில் புதுப்பாட்டு - எந்தன்
இயேசு தருகிறார் (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் - அல்லேலூயா (2)
பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் (2)
(ஆனந்தம் கொள்ளுவேன்...)
வாதை நோயும் வந்த போது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் (2)
(ஆனந்தம் கொள்ளுவேன்...)
சேற்றில் வீழ்ந்த என்னை அவர் தூக்கி எடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் (2)
(ஆனந்தம் கொள்ளுவேன்...)
தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் (2)
(ஆனந்தம் கொள்ளுவேன்...)
இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்து நிற்கின்றேன் (2)
(ஆனந்தம் கொள்ளுவேன்...)